அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 5 பேர் கொண்ட குழுவினர் வேலுமணி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோவையில் 35 இடங்களிலும் சென்னையில் 15 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல்லில் தலா 1 இடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.
Categories