தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு பிறகு முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து அவர்களுடைய வீடுகளில் அதிரடியாக ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அதன்பின்னர் எஸ் பி வேலுமணி ஆகியோரின் வீட்டிலும் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது.
இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படுகிறது என்று அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.