கடந்த திமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர் விஜயபாஸ்கர். இவர் தனது வீட்டில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து கரூரில் உள்ள அவருடைய வீடு, அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதில் முக்கிய ஆவணங்கள், சொத்துக்களின் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 இல் ரூபாய் 2.5 கோடி, 2021 இல் ரூபாய் 8.62 கோடி என 55 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவருடைய மனைவி விஜயலட்சுமி மற்றும் அவருடைய சகோதரர் சேகர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.