விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஆவின் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணி வாங்கித் தருவதாக கூறி 30 லட்சம் பணம் வாங்கியதாக அதிமுக பிரமுகர் விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகியோர் மீது மாவட்ட குற்றவியலில் புகார் அளித்துள்ளனர். அதிமுக பிரமுகரான விஜய் நல்லதம்பி கொடுத்த புகாரில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் மூலம் 1,06 கோடி பெற்றதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராஜேந்திரபாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பணத்தை இழந்தவர்கள் விஜய் நல்லதம்பியிடமே பணத்தை கொடுத்ததாகவும், எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்கில் என்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று கோடி பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது பண மோசடி மட்டுமன்றி கொலைமுயற்சி புகாரும் உள்ளதாக நீதிமன்றத்தில் போலீஸ் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் நவம்பர் 24 வரை ராஜேந்திர பாலாஜி மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.