Categories
மாநில செய்திகள்

BREAKING : முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்..!!

உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையா காலமானார்.

77 வயதான சேடப்பட்டி முத்தையா உடல் நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர்  உடல்நலக்குறைவால் காலமானார்.. இவர் 1977, 1980, 1984, 1991 ஆகிய ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.. 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தவர் சேடப்பட்டி முத்தையா.

2006 ல் அதிமுகவில் இருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா திமுகவில் தேர்தல் பணிக்குழு தலைவராக பணியாற்றி வந்தார். பெரியகுளம் எம்.பி தொகுதியில் வென்று வாஜ்பாய் அரசில் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகிதுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |