Categories
உலக செய்திகள்

#BREAKING : முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் உடல் நலக்குறைவால் காலமானார்..!!

முன்னாள் போப்பான 16 ஆவது பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் போப் பெனடிக்ட் வாடிகனில் உள்ள தனது இல்லத்தில் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு வயது 95… 2013 ஆம் ஆண்டில், இடைக்காலத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் ஆனார்.

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட், நீண்டகால நோயின் பின்னர் தனது 95வது வயதில் காலமானார் என்று வாடிகன் சனிக்கிழமை அறிவித்தது. வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:”போப் எமரிட்டஸ் XVI பெனடிக்ட் இன்று காலை 9:34 மணிக்கு வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”

2013 ஆம் ஆண்டில், இடைக்காலத்தில் இருந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் போப்பாண்டவர் ஆனார். அவர் சனிக்கிழமை காலை 9:34 மணிக்கு (உள்ளூர் நேரம்) வத்திக்கானின் மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். வயது முதிர்வு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது” என்று தெரிவித்துள்ளார்.

https://twitter.com/cnnphilippines/status/1609129568635596802

Categories

Tech |