முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த அடிப்படையில் விசாரணை ஆணையம் முன் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார்.