Categories
தேசிய செய்திகள்

#BREAKING : மும்பை கடற்படை கப்பலில் வெடி விபத்து…. 3 வீரர்கள் பரிதாப பலி..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடற்படை கப்பல் ரன்வீரில் ஏற்பட்ட விபத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்..

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது ஐஎன்எஸ் ரன்வீர் கடற்படை கப்பல்.இந்த கப்பலில் கப்பல் படையினர் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.. அந்த சமயத்தில் அந்தக் கப்பலின் உள் பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.. இதனால் 3 வீரர்கள் உயிரிழந்ததாகவும் ஆரம்பகட்ட தகவல் வெளிவந்திருக்கிறது.. இதையடுத்து உடனே ரன்வீர் கப்பலின் உள் பகுதியில் ஏற்பட்ட வெடிவிபத்து கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது..

இந்த கப்பல் இந்திய கப்பல் படையின் முக்கிய கப்பல்களில் ஒன்றாகும்..  ஐஎன்எஸ் ரன்வீர் கப்பலில் இதுபோன்ற விபத்து ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்பு நடவடிக்கை ஈடுபடவேண்டும் என்றும், விபத்துக்கான காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும் என்று கப்பல் படைத் தலைமை உத்தரவிட்டுள்ளது..

மேலும் வேறு யாரேனும் கப்பலின் உள்பகுதியில் சிக்கி இருக்கிறார்களா? யாருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதா? என்று கண்டறியும் முயற்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது.. ரன்வீர் போர் கப்பல் இந்திய கடற்படையில் 1986 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது..

 

 

 

 

Categories

Tech |