Categories
கடலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை… பரபரப்பு தீர்ப்பு… ஒருவருக்கு தூக்கு… 12 பேருக்கு ஆயுள்!!

ஆணவக்கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி உறவினர்கள் எரித்து கொடூரமாக கொலை செய்தனர்.. இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது..

இந்த நிலையில் ஆணவ கொலை செய்த வழக்கில் பெண்ணின் தந்தை, அண்ணன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் எஸ்சி, எஸ்டி நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தமராஜா தீர்ப்பு  வழங்கி உள்ளார். மேலும் 2 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆணவ கொலை வழக்கில் அப்போதைய ஆய்வாளர் செல்லமுத்து, எஸ்.ஐ தமிழ் மாறன்,
கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேல், ஜோதி உள்பட 13 பேர் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

Categories

Tech |