முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்பிக்கள் முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமான அடிப்படையில் பலமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் விஸ்வேஸ்வரர் துடு முல்லைப் பெரியாறு அணை நீரியல், புவி அதிர்வு, கட்டுமானம் என்று அனைத்திலும் அணை பலமாக உள்ளது என்று விளக்கமளித்தார். மேலும் இதுதொடர்பாக மத்திய குழு முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று அணையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ததாகவும் அதில் தெரிவித்துள்ளார்.