தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு என்பதை பொதுமக்கள் அறிய செய்வது ஆட்சியர்களின் கடமை என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பால் விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறுவதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் காய்கறி, பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தடையின்றி கிடைப்பதை உள்ளாட்சித்துறை, வேளாண் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.