Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#Breaking: முழுமுடக்கம் 2 நாள் நீட்டிப்பு – அரசு அறிவிப்பு …!!

மதுரையில் பொதுமுடக்கம் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சென்னையில் நேற்றைய பாதிப்பு ஒரு மாதங்களுக்கு பிறகு 1200 க்கும் குறைவான எண்ணிக்கையில் உறுதிசெய்யப்பட்டது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. சென்னையில் கொரோனா தாக்கம் குறைந்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தூங்கா நகரம் என்ற மதுரை கொரோனா நகரமாக மாறும் நிலைக்கு  பாதிப்பு அதிகரித்து வந்தது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிக தொற்று கண்டறியப்பட்டதால் மாவட்ட நிர்வாகம் முழு ஊரடங்கு பிறப்பித்தது. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் கிராம ஊராட்சிகளில் முழு முடக்கம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று நள்ளிரவோடு நிறைவடைய இருக்கும் நிலையில், காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமாரிடம் இது கேள்வி எழுப்பியபோது, ஊரடங்கால் மதுரை  மாவட்டத்தில் காய்ச்சல் முகாம்களை அதிகளவுக்கு பலன் கொடுத்துள்ளது. இந்த புள்ளி விவரங்களை எல்லாம் ஒப்பிட்டு தமிழக முதல்வரிடம் மேலும் ஊரடங்கிற்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசு தற்போது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது உத்தரவு பிறப்பித்துள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் அமலில் உள்ள கட்டுப்பாடுகளும் செலவுகளும் தொடரும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |