தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழு ஊரடங்கால் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்காமல் இருந்த கோயம்பேடு மார்க்கெட் இன்று வழக்கம் போல் செயல்படுகிறது. கொரோனா பரவல் அச்சத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது.