இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகத்தின் முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகுந்த மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருவதால், முழு பொது முடக்கம் போடலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.