Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு: சனி, ஞாயிறு தடை – அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தபட்டு வந்த ஊரடங்கின் காரணமாக கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு கணிசமாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல ஒரு சில இடங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களிலும் மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஏற்காடுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உள்ளூர் வியாபாரிகள் உரிய ஆவணங்களை காண்பித்து ஏற்காடு செல்லலாம் என்றும், பிற நாட்களில் ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு RT-PCR பரிசோதனை சான்று அவசியம் என்றும் அறிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சேலம் கொங்கணாபுரம் வாரச்சந்தையை மூடவும் ஆணையிட்டுள்ளார்.

Categories

Tech |