Categories
மாநில செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு…. தமிழகத்தில் தளர்வு…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமன்றி பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி அமலுக்கு வந்தது. மேலும் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 26 ஆம் தேதி  முதல் பல கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்க தடை இல்லை. திரைப்பட சின்னத்திரை படப்பிடிப்புகள் வழிகாட்டு நெறிமுறைகள் உடன் நடத்த அனுமதி. போட்டித் தேர்வுகளில் பங்கேற்பவர்கள் உரிய அடையாள அட்டையுடன் தேர்வு எழுத அனுமதி. கல்வி நிலையங்களில் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |