நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் மே-1 தொழிலாளர் தினமான அன்று பொதுவிடுமுறை என்பதால் முழுஊரடங்கிற்கு அவசியமில்லலை என்றும், மே-2 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி. இரவு நேர ஊரடங்கில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்க அனுமதி.சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமத. போட்டித்தேர்வுகளில் பங்கேற்பவர்கள் உரிய அடையாள அட்டையுடன் தேர்வு எழுத அனுமதி. கல்விநிலையங்கள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த வேண்டும்.