தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 20 மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி தொற்று பரவல் கட்டுப்பாட்டு பணிகளை ஒருங்கிணைக்க அமைச்சர்களை நியமித்தல் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி
சென்னை – மா. சுப்பிரமணியன், சேகர் பாபு,
மதுரை – பழனிவேல் தியாகராஜன்
சேலம் – செந்தில் பாலாஜி
திருப்பூர் – சாமிநாதன்
கோவை – சக்கரபாணி, ராமச்சந்திரன்
தூத்துக்குடி – கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்சி – கே.என்.நேரு
நெல்லை – தங்கம் தென்னரசு
ஈரோடு – முத்துசாமி
காஞ்சிபுரம் – ஏ.வ.வேலு
வேலூர் – துரைமுருகன்
விழுப்புரம் – பொன்முடி
கடலூர் – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
நாகை, திருவாரூர் – மெய்யநாதன்
கிருஷ்ணகிரி – ஆர்.காந்தி
தஞ்சாவூர் – அன்பில் மகேஷ்
தேனி – ஐ.பெரியசாமி
கன்னியாகுமரி – மனோ தங்கராஜ்