தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 24ஆம் தேதி கடுமையான முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கை வருகிற 14-ஆம் தேதி வரை சில தளர்வுகள் அளித்து மேலும் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதனால் மக்கள் வெளியில் சுற்ற தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கில் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைதொடர்ந்து காவல்துறையினர் அனைவரும் கவனிவுடன் நடப்பதை மக்கள் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்த நிலையில், தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. ஊரடங்கை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.