தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமன்றி மக்கள் தேவையில்லாமல் வெளியில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களில் நியாயவிலை கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு நாட்கள் முழுவதும் செயல்படும் என தெரிவித்துள்ளார். வங்கிகள் மற்றும் அவை சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதி எனவும் கூறியுள்ளார்.