Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: முழு ஊரடங்கு – மத்திய அரசு புதிய அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் முழு ஊரடங்கு, பகுதிநேர ஊரடங்கு என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முழு ஊரடங்கினால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.

எனவே முழு ஊரடங்கில் உளவியல் ஆலோசனை தொடர்பாக தேசிய அளவிலான உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி 08046110007 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் தொடர்பான ஆலோசனைகள் பெறலாம். 1075 மற்றும் குழந்தைகள் 1098, மூத்த குடிமக்கள் 14567 என்ற எண்ணில் தமிழகம், கர்நாடகா, தெலங்கானா, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் இருந்து தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |