முழு ஊரடங்கு போது வெளியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்று பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் தமிழக அரசு மேலும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் நிலையில் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதையும் தவிர்க்கவும். சமூக இடைவெளி இல்லாமல் நிற்பதை தவிர்க்க வேண்டும். இது குறித்து காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.