Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு 25ஆக உயர்வு …!!

கேரளா மாநிலம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இது மிகப் பெரிய அதிர்ச்சிகர சம்பவமாக பார்க்கப்படுகின்றது.  நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் 32 குடியிருப்புகள் இருந்தன. மலையடிவாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாறைகள் உருண்டு வந்து வீடுகளை எல்லாம் முழுவதுமாக மூழ்க செய்தன. தற்போது தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

உடல்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. நேற்று வரை 17 பேர் உடல்கள்  கண்டெடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை மேலும் ஐந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது மேலும் 3பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் மொத்த உயிரிழப்பு 25ஆக உயர்ந்துள்ளது.

15 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் 44 பேரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதே போல தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 70 பேர் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Categories

Tech |