Categories
மாநில செய்திகள்

BREAKING: மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது…!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 26 குடியரசு தினம், ஜனவரி 28 வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு நாளையொட்டி மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாது. மீறினால் மதுபான விதி முறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |