Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking:  மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு ஒப்புதல்… மத்திய அமைச்சரவை..!!!

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டப்படி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என கூறியிருந்தார்.

அதன்படி மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |