Categories
மாநில செய்திகள்

#BREAKING: மேகதாது அணை….. தனித் தீர்மானம் தாக்கல்…. அமைச்சர் துரைமுருகன்…..!!!!

2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இந்நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய துரைமுருகன், அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |