தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டியது. எனவே அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு படிப்படியாக வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் திறக்கப்படும் பாதையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.