Categories
தேசிய செய்திகள்

#BREAKING: மாநிலம் முழுவதும் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு அமல்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும். அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஸ்பாக்கள், சலூன்கள் மற்றும் அழகு நிலையங்களை நாளை முதல் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் உயிரியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களும் நாளை முதல் மூடப்படும். புறநகர் ரயில்கள் நாளை முதல் இரவு 7 மணி வரை 50% பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும். மால்கள், திரையரங்குகளில் இரவு 10 மணி வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே அனுமதி. சந்தைகளில் இரவு 10 மணி வரை 50% பொதுமக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வருவதாக மேற்கு வங்க மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |