இந்தியாவில் மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே நாட்டில் இருந்து குஜராத்தின் ஜாம்நகர் பகுதிக்கு திரும்பிய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புனே ஆய்வகத்தில் நடைபெற்ற மரபணு சோதனை மூலம் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Categories