Categories
தேசிய செய்திகள்

BREAKING : மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான்…. சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒருவருக்கு மைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2ஆம் தேதி ஒமைக்ரான் தொற்று உள்ளே நுழைந்தது. இன்று ஆந்திராவில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதியான நிலையில் தற்போது கர்நாடகாவில் ஒருவருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் 40 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான்  வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |