சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நேற்று நடந்தது. அதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் மேலும் சிலர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த வெடி விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி பகுதியில் மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து உள்ளனர். அந்த ஆலையில் எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளனர் என்ற தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.