தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இந்த வாரம் மழைப்பொழிவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நேற்று முதல் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை எதிரொலியாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதால் இன்னும் சில மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது.