தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதுமட்டுமில்லாமல் நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் கனமழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஒன்பது மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில், சிவகங்கை திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Categories