Categories
மாநில செய்திகள்

BREAKING: மேலும் 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. புதிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, தஞ்சை, திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக தர்மபுரி, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Categories

Tech |