மே 1ம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 இலிருந்து ரூ.10 ஆகவும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தததையடுத்து பல மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தலாமா என்று யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.