இன்றைய நவீன காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். வங்கிகளுக்கு செல்லாமலேயே ஆன்லைன் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நடைமுறை எளிதாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிகளவில் பயன்டுத்தி வருகின்றனர். மேலும் இந்த இக்கட்டான கொரோனா சூழலில் மக்கள் வங்கிகளுக்கும், ஏடிஎம்க்கும் செல்வதற்கு தயங்குவதன் காரணமாக ஆன்லைனிலேயே பணப்பரிவர்த்தனை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் மே 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 2 மணிவரை நெப்ட் சேவை நிறுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பராமரிப்பு பணி காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. ஆன்லைன் வங்கி சேவையில் பெரிய அளவிலான ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய நெப்ட் சேவை பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.