Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: யாருக்கும் விடுமுறை கிடையாது – திடீர் அதிர்ச்சி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஏப்ரல் 12ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். அரசின் கொரோனா கட்டுப்பாடு காரணமாக  நடைபெறவிருந்த நார்த்தாமலை தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதால் அதற்காக அறிவித்த உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |