ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள மொத்த 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை நிர்வகிக்க உள்ளனர். அதன்படி சாயல்குடி முதல் வார்டில் மாரியப்பன், 2வது வார்டில் பானுமதி, 3வது வார்டில் இந்திரா, 4வது வார்டில் சண்முகத்தாய், 5வது வார்டில் கோவிந்தன், 6வது வார்டில் மாணிக்கவள்ளி, 7 வது வார்டில் முகமது ஜின்னா, 8 வது வார்டில் அழகர்வேல்பாண்டியன் 9வது வார்பில் ஆபிதா பீவி, 10வது வார்டில் குமரையா, 11வது வார்டில் அமுதா, 12வது வார்டில் இந்துராணி, 13வது வார்டில் மணிமேகலை, 14வது வார்டில் இரா.காமராஜ், 15வது வார்டில் மாணிக்கவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் சுயேச்சைகள் ஆவார்கள்.