தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை யாரும் செல்ல வேண்டாம் என்ற பெயர் இடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நவம்பர் 13 முதல் 16 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என்பதால், நிலச்சரிவு அபாயம் இருப்பதாலும் நீலகிரிக்கு செல்லும் மக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளது.