வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னைக்கு கிழக்கே, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமானது மையம் கொண்டுள்ளது. மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதனால் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், இன்று இரவிலிருந்து நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். நீர்நிலைகளின் அருகில் நின்று செல்பி எடுக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது. வீட்டில் ஆதார், ரேஷன் கார்டுகள் போன்ற ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.