Categories
சினிமா

BREAKING: ரஜினியின் ஜெயிலர் பட வீடியோ ரிலீஸ்…. செம மாஸ்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஜெயிலர் திரைப்படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் படக்குழு ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |