Categories
தேசிய செய்திகள்

BREAKING: ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்றுக் கொள்ள வேண்டும்…. புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. ரயில்வே துறையில் முன்னேற்றத்திற்கு கொண்டு சென்ற தரமான ரயில்கள் நல்ல பயண அனுபவத்தை பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே தற்போது உள்ள நோக்கம். விலங்குகள் தண்டவாளங்களை கடக்கும் போது விபத்து ஏற்படுகிறது.

இதனைத் தடுக்க தண்டவாளங்களை உயர்த்தவும்,யானைகள் கடக்க தரை பாலம் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் மாநில மொழி கற்க வேண்டும். மொழி தெரியாமல் இருப்பதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகின்றது. இதற்காக இந்தியாவில் பல்வேறு சிறப்பான மொழிகள் மற்றும் கலாச்சாரம் நிறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |