சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினரிடையே மோதல் நடந்தது. அப்போது மாணவர்கள் சிலர் மின்சார ரயில் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மாநில கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே ரயில் நிலையங்களில் மோதல் நிகழ்வது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. அதன்படி நேற்று திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற மாநில கல்லூரி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்ததாக கூறப்படுகின்றது.
அதனால் அவர்கள் இறங்கி விட்ட நிலையில் அதே திசையில் மின்சார ரயிலில் வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் ரயில் மீது கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.