Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யா-உக்ரைன் இடையே நீடிக்கும் போர்…. இந்தியர்கள் உடனே வெளியேற உத்தரவு……!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில்  ரஷ்யா-உக்ரைன் படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் உடனே வெளியேறும்படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ரயில் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக நகரிலிருந்து எப்படியாவது இன்று (மார்ச் 1)வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

Categories

Tech |