ரஷ்யாவில் பெர்ம் மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. 8 மாணவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பிச் சென்ற மாணவனை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்..
அதே நேரத்தில் கட்டிடத்திலிருந்து தப்பிக்க மக்கள் முதல் மாடியின் ஜன்னல்களிலிருந்து குதிப்பது போன்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.. குதித்ததில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. அந்த மாணவன் எதற்காக அப்படி செய்தான் என்று தெரியவில்லை..