Categories
மாநில செய்திகள்

#BREAKING : ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்…!!

பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை..

கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஆவின் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த புகாரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து கடந்த 17ஆம் தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 9-வது நாளாக தீவிரமாக தேடி வருகிறது..

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி பிணை மனு தாக்கல் செய்திருந்தார்.. அங்கு அது ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் அவர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார்.. இந்த சூழலில் பெங்களூர், கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை முகாமிட்டு ராஜேந்திர பாலாஜியை தேடிவரும் நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தொடர்ந்து அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்கும் வகையில் கடந்த 23ஆம் தேதி அவருக்கு எதிராக  விமான நிலையங்களில் லூக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது  பண பரிவர்த்தனை மூலமாக நகர்வுகளை தடுக்க அவருடைய வங்கிக் கணக்கை காவல்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அவருடைய பெயரில் இருக்கக்கூடிய 6 வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது..

 

 

Categories

Tech |