தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு மீதான விசாரணை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்த்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ராஜேந்திர பாலாஜி மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.