வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலமாக மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில்டெல்லி, விக்யான் பவனில் வங்கி வைப்புத் தொகைகளுக்கான காப்பீடு தொகையை உயர்த்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் வங்கி வைப்பு தொகைகள் மீதான காப்பீட்டு தொகை ₨1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.