சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தொடுத்த வழக்கை அபராதத்துடன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ரியல் ஹீரோவாக இருங்கள், ரீல் ஹிரோவாக இருக்காதீர்கள் என்று அறிவுறுத்தி, ஒரு லட்சம் அபராதத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நுழைவு வரி விவகாரத்தில் தனி நீதிபதியின் கருத்தை நீக்க கோரி மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி சுப்பிரமணியம் கருத்து மற்றும் ஒரு லட்சம் அபராதத்தை நீக்கக்கோரி விஜய் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. விலக்கு கேட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.