தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தகுதியான மாணவிகளிடம் சான்றிதழை பெற அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை இன்று முதல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து அரசு அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு உள்பட மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாணவியரே, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.